
பிரபல ஓடிடி தளமான ஜீ ஃபையில் ‘லாக்கப்', ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த 2021ம் வருடத்தில் ஜீ ஃபை தளத்தில் மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகள் தொடர்ந்து வரவிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் அடுத்தப் படைப்பாக, வைபவ் - வாணி போஜன் நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை 'ஜீ ஃபை' தளம் வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் இப்படம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், ‘'இயக்குநர் ராதாமோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர்என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு 'அழகிய தீயே' படத்தில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து 'மொழி', 'பிருந்தாவனம்', 'காற்றின் மொழி' இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்தப் படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார். மற்ற படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

நடிகர் கருணாகரன் கூறுகையில், ''நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. 'உப்பு கருவாடு' படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி. அதே சமயம் வைபவ், எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)